தொடர்பு படிவம்
வேலைத்தளத்தில் பாலியல் இம்சையை எதிர்கொள்கின்றீர்களா? அல்லது உங்களுக்குத் தெரிந்த யாருக்காவது அப்படி ஏதாவது நடந்துள்ளதா? உங்களுக்கான உதவியை இங்கே பெறலாம். சம்பவத்தை எடுத்துக்கூறுவதுடன் உங்களது கேள்விகளையும் முன்வைக்கலாம். நீங்கள் பெயர் எதுவும் குறிப்பிடத்தேவையில்லை. நிபுணத்துவம் வாய்ந்த ஆலோசனைக்குழு மூன்று நாட்களிற்கிடையில் உங்களுக்குப் பதில் தருவார்கள். சகல கோரிக்கைகளும் இரகசியம் பேணப்பட்டு கையாளப்படும்.
அநாமதேய நபராகத் தகவல் தர விரும்பின், அதற்கு முதல் புனைபெயரில் மின்னஞ்சல் ஒன்றைத் தயார் செய்யச் சிபாரிசு செய்கின்றோம்.
கேள்விகள் அல்லது சந்தேகம்?
பாலியல் தொல்லைக்கு ஆளாகி உள்ளீர்களா இல்லையா என்பதில் உங்களுக்கு ஐயம் உண்டா? சிலவேளை நீங்கள் பிழையாக நடந்துகொண்டுள்ளதாக நினைக்கின்றீர்களா? எதிர்ப்புக்காட்டினால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனப் பயப்படுகின்றீர்களா? யாரிடம் முறையிடுவது (நாடுவது) எனத் தெரியவில்லையா?
பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பல நபர்கள் இதே ஐயங்களைக் கொண்டுள்ளனர். ஆகையால் நடந்த சம்பவத்தைப் பற்றி நிபுணத்துவம் வாய்ந்த நபர்களுடன் உரையாடி ஆலோசனை பெறுவது நல்லது.
எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். எமது ஆலோசனைக்குழு உங்கள் கேள்விகளுக்குத் தகமையான, நம்பிக்கையான பதிலைத் தரும்.